சென்னை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு சன்னா மசாலா. வீட்டில் சோலா பூரி செய்தால் சன்னா மசாலாவையும் செய்து பாருங்கள். இரண்டும் சூப்பரான காம்பினேஷன். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
வெள்ளை கொண்டைக் கடலை – 100 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சன்னா மசாலா – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை: முதலில் வெள்ளை கொண்டை கடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சீரகம், வெங்காயம், தக்காளி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
நன்கு வதங்கிய பிறகு வேக வைத்த கடலை, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சன்னா மசாலா, மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வாசனைக்கு சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி விட்டால் சுவையான சன்னா மசாலா தயார். இதனை சோலா பூரி, சப்பாத்தி, பரோட்டா ஆகியவைக்கு சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.