ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு விருப்பமுள்ள ஏதோ ஒரு கடவுளை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த கடவுளை வழிபடுவதற்கு பெரும்பாலும் வெண்கலம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். இதைத் தவிர பல இல்லத்தரசிகள் வெண்கலம்-பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களை பெட்டிக்குள் அடைத்து வீட்டின் பரண் மீது வைத்து அதனை வருடத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வார்கள். எனினும் இந்த பாத்திரங்களை கழுவுவதற்கு பெண்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆகவே இந்த பதிவில் பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களை எளிமையான முறையில் கழுவுவதற்கான ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் உப்பு: பித்தளை பாத்திரங்களை இந்த எளிமையான பொருட்களைக் கொண்டு நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது அது பளபளப்பாக மாறிவிடும். இதற்கு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பை கலந்து பேஸ்ட் ஒன்றை தயாரிக்கவும். அந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பித்தளை பாத்திரங்களை தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர்: வீட்டிலிருந்தபடியே பித்தளை பாத்திரங்களை கழுவுவதற்கான மற்றொரு எளிமையான குறிப்பு இந்த பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை.
இந்த கலவையை பயன்படுத்தி பித்தளை பாத்திரங்களை தேய்த்து விட்டு 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். அதன் பிறகு ஒரு காட்டன் துணியை கொண்டு நன்கு தேய்த்து எடுத்தால் பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு இது ஒரு அற்புதமான வழி. ஒரு காட்டன் துணியில் கெட்சப் எடுத்து அதனை 15 நிமிடங்களுக்கு பித்தளை பாத்திரங்கள் மீது தேய்க்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு அலசுங்கள்.
இந்த இரண்டு பொருட்கள் கட்டாயமாக நம் வீட்டில் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்று. மென்மையான துணி மற்றும் பித்தளை பொருட்களை சுத்தம் செய்வதற்கு இது அற்புதமாக செயல்படுகிறது. இதற்கு மைதா மாவையும், வினிகரையும் கலந்து பேஸ்டாக்கி பித்தளை பாத்திரங்கள் மீது தடவும். இதனை 2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு காட்டன் துணி வைத்து சுத்தம் செய்து எடுக்கவும். இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொண்டு பித்தளை பாத்திரங்கள் மீது தேய்த்து அரை மணி நேரத்திற்கு அவை ஊறுமாறு வைக்கவும். அதன் பிறகு ஒரு பிரஷ் வைத்து நன்றாக தேய்த்து எடுத்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.