சென்னை: சுவையான முறையில் பரங்கிக்காய் சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள் :
பரங்கிக்காய்- 1/2கப்
பூண்டு- 4பல்
மிளகுத்தூள்- தேவைக்கேற்ப
சீரகத்தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
வெண்ணெய்-1 ஸ்பூன்
செய்முறை: பரங்கிக்காயை சிறிதாக சிறிதாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காய், பூண்டு போட்டு 5நிமிடங்கள் வதக்கவும். பரங்கிக்காய் வெந்தவுடன் இறக்கி ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும்.
பின் கடாயில் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும். சுவையான பரங்கிக்காய் சூப் ரெடி.