தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தக்காளி – 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய உருளைக்கிழங்கு – 3
தண்ணீர் – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை: *முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து, மசித்துக் கொள்ள வேண்டும். * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும். * பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5-8 நிமிடம் தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். * பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க வேண்டும். * பின்பு அதில் சர்க்கரை சேர்த்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு தக்காளி கிரேவி தயார்.