தேவையானவை:
பிஞ்சு புடலங்காய் – கால் கிலோ
பொட்டுக்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 7
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி தழை, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் இல்லாமல் அடிக்கவும். மிளகாயை கழுவி மிக பொடியாக நறுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். புடலங்காய் பத்து நிமிடத்தில் தண்ணீர் விட்டுவிடும். தண்ணீர் இல்லாமல் காயை பிழிந்து கொள்ளவும். மேலும், பொட்டுக்கடலை தூள், பச்சை மிளகாய் – வெங்காய கலவை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.