தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
ரொட்டித் துண்டுகள் – 10
உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
துருவிய இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 1
கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ரொட்டியை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரட் பவுடர், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
கடலை மாவை பஜ்ஜி மாவில் கரைக்கவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.