தேவையானவை :
பிஞ்சி முள்ளங்கி – கால் கிலோ
கடலைப்பருப்பு – அரை கப்
மிளகாய் – 10
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
வெங்காயம் – 10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
உப்பு – தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முள்ளங்கியை துருவி நன்கு பிழிந்து கொள்ளவும். கடலைப்பருப்பை ஊறவைத்து, அதனுடன் சீரகம், சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன் துருவிய முள்ளங்கியை மசித்து, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மிருதுவாகப் பொரித்தெடுக்கவும். இந்த சாப்ஸ் சாப்பிடும் அனைவரும் ‘சூப்பரோசூப்பர்’ என்று கொண்டாடுவார்கள்!