தேவையான பொருட்கள்:
சப்பாத்தி- 2
முட்டை – 3
மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
மிளகுதூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வேகவைத்த பச்சைப்பயறு – 4 டேபிள்ஸ்பூன்.
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும். பிறகு, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டையின் பாதியை ஊற்றி நன்றாக பரப்பி, சுட்ட சப்பாத்தியை அதன் மீது வைத்து சமைக்கவும். அது சூடானதும், வேகவைத்த பருப்பை உப்பு சேர்த்து கிளறி, சப்பாத்தியின் நடுவில் வைத்து, அதை உருட்டி நான்கு துண்டுகளாக வெட்டவும். சுவையான சப்பாத்தி முட்டை ரோல் தயார்.