சென்னை: இல்லதரசிகள் பயன்பெறும் வகையில் சில சமையல் குறிப்புகள் தரப்பட்டுள்ளது.
எலுமிச்சை சாதம் செய்யும் போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும். சப்பாத்தி செய்யும் போது முதலில் சூடான பால், உப்பு மற்றும் மாவு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். அப்புறம் என்ன மிருதுவான சப்பாத்தி தயார்.
பொரியல் போன்ற செய்யும் போது அதில் சிறிதளவு சோயா சாஸ் சேர்த்தால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். சாஸில் உப்பு இருப்பதால் இதை சேர்க்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம்.
வீட்டில் சர்க்கரை நோயாளி இருந்தால் சோயாபீன்ஸ் 1 கிலோ, புழுங்கலரிசி 1 கிலோ, உளுந்து 200 கிராம்ஸ் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தோசை வார்த்து கொடுக்கலாம்.