முருங்கைக்கீரை உணவில் மிகவும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. இது இரும்புச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் புரதங்கள் ஆகியவற்றில் சிறந்தது. கண் பார்வைக்கு, எலும்புகளை பலப்படுத்துவதற்கும் இது மிகவும் பயனுள்ளது. இதனை வாரம் ஒரு முறை பொரியலாகவோ, குழம்பாகவோ செய்து சாப்பிடுவது நல்லது.

முருங்கைக்கீரை சுத்தம் செய்வதில் சிலர் சிரமப்படுவார்கள். ஆனால் ஒரு எளிய ரகசியம் உண்டு: வாங்கிய கீரையை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைக்கவும். 10 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து காம்புகளை எடுத்தால், இலைகள் எளிதில் உதிர்ந்து விடும். பின் சிறு களைகளை கழுவி சமைக்கலாம்.
மறொரு வழி: வீட்டில் உள்ள காய் சீவுகள் மற்றும் ஸ்டீல் தகடுகளை பயன்படுத்தி காம்புகளை ஒவ்வொன்றாக சொறுகி இலைகளை பிரித்து எடுக்கலாம். இது மிகவும் விரைவாக 5 நிமிடத்திற்குள் முடியும்.
இந்த முறைகளை பயன்படுத்தி முருங்கைக்கீரையை உருவ செய்து, சுலபமாக சமைத்துக் கொள்ளலாம். இதனால் சமைக்கும் வேலைக் குறையும், உடல் ஆரோக்கியத்திற்கும் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.