பெரும்பாலான வீடுகளில் எலுமிச்சை தோலை சாறு எடுத்த பிறகு தூக்கி எறிகிறார்கள். ஆனால், எண்ணெய் பசையுள்ள பாத்திரங்களை சுத்தம் செய்ய இதை பயன்படுத்தலாம். தோலில் உள்ள சிட்ரிக் ஆசிட் கிரீஸ் மற்றும் கறைகளை நீக்கி பாத்திரங்களை பளபளப்பாகவும், புதியதாகவும் வைத்திருக்கும்.

சாத்தியமான 4 எளிய வழிகள்:
- எலுமிச்சை + பேக்கிங் சோடா: பேஸ்ட் செய்து பாத்திரங்களில் தேய்த்து கழுவலாம்.
- எலுமிச்சை + உப்பு: கறைகள் படிந்த இடங்களில் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
- எலுமிச்சை சாற்றில் ஊறவைத்தல்: 15–20 நிமிடங்கள் ஊறவைத்து, மீதமுள்ள கிரீஸை ஸ்பான்ஜ் மூலம் நீக்கலாம்.
- எலுமிச்சை + வினிகர் ஸ்ப்ரே: கலவையை தெளித்து சில நிமிடங்கள் வைக்கவும், பின்னர் நிரால் கழுவி சுத்தம் செய்யலாம்.
இந்த எளிய முறைகள் வீட்டிலேயே செய்யக்கூடியவை, பாத்திரங்களை பாதுகாப்பாக சுத்தம் செய்ய உதவும்.