நமது வீட்டில் சமையலறை மற்றும் கழிவறை ஆகிய இரண்டும் கட்டாயமாக தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டிய இடங்கள். இந்த இரண்டு இடங்களிலுமே கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் இவற்றை தினமும் சுத்தம் செய்வது அவசியம். அதிலும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை சமைக்கும் சமையலறையின் தூய்மை குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமானது. சமையலறையில் அழுக்குகள் இருந்தால் அது பல்வேறு விதமான நோய்களை வரவேற்கலாம். குறிப்பாக சமையலறையில் உள்ள டைல்ஸ், கேஸ் அடுப்பு மற்றும் சிங்க் போன்றவை எளிதில் அழுக்காகி விடுகிறது. டைல்ஸ் மற்றும் கேஸ் ஸ்டவ் போன்றவற்றை வாரம் ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யலாம் என்றாலும் பாத்திரங்கள் கழுவும் சிங்கை தினமும் சுத்தமாக வைப்பது அவசியம்.
ஆனால் சிங்கிள் உணவு துகள்கள் மாட்டிக்கொண்டால் அது மிகவும் தொல்லையானதாக அமையலாம். சிங்க் அடைத்துக் கொண்டால் அதனை சுத்தம் செய்வதற்கு நாம் போராட வேண்டி இருக்கும். எனவே உங்களுக்கு உதவும் வகையில் சிங்க் அடைத்து இருந்தால் அதனை எளிமையான முறையில் எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறை சிங்கை காபி கொண்டு சுத்தம் செய்யுங்கள்: அடைப்பட்ட கிச்சன் சிங்கை சுத்தம் செய்வதற்கான சிறந்த ஆப்ஷன் காபி பொடி. இதற்கு உங்களுக்கு காபி பொடி தவிர லிக்விட் சோப்பு மற்றும் சுடு தண்ணீர் தேவைப்படும். கிச்சன் சிங்க் முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருந்தால் முதலில் அதில் காபி பொடியை சேர்த்து, பின்னர் லிக்விட் சோப்பை சேர்க்கவும்.
இதன்பிறகு அந்த கலவையில் சுடு தண்ணீர் ஊற்றவும். இவ்வாறு செய்வதன் மூலமாக சிங்கில் அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் அகற்றப்படும். அதுமட்டுமல்லாமல் சிங்கிள் இருக்கக்கூடிய துர்நாற்றம் நீங்கும். சிங்கை வினிகர் பயன்படுத்தியும் நீங்கள் சுத்தம் செய்யலாம்: கிச்சன் சிங்கை சுத்தம் செய்வதற்கு நீங்கள் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு முதலில் உங்களுடைய கிச்சன் சிங்கில் பேக்கிங் சோடாவை போட்டு, பின்னர் வினிகரை சேர்க்கவும். இவ்வாறு செய்வது அதில் உள்ள அழுக்குகளை எளிதாக அகற்றுவதற்கு உதவும். ஒருவேளை உங்கள் வீட்டில் வினிகர் இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். கிச்சன் சிங்க் பற்றி நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்: சமையலறை பகுதியில் உள்ள சிங்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
அதில் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இதனை தவறாமல் செய்யுங்கள். இது தவிர கிச்சன் சிங்கில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். உணவுத் துகள்களை நேரடியாக சிங்கில் ஒருபோதும் போடாதீர்கள். பாத்திரங்களை முழுமையாக துடைத்து விட்டு, அவற்றில் எந்த ஒரு உணவும் ஒட்டி இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு அதனை சிங்கில் போடவும். மேலும் கிச்சன் சிங்கில் தண்ணீர் வடியும் இடத்தில் கட்டாயமாக வடிகட்டி பயன்படுத்தவும். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலமாக சாக்கடை குழாயில் அழுக்கு நுழைவதற்கான வாய்ப்பு குறைகிறது