தேவையான பொருள்கள்:
ஆட்டு எலும்பு – 250g
பழ புளி – சிறிய உருண்டை
தேசிக்காய் – பாதி
மஞ்சள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
அரைப்பதற்கு:
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
தனியா – 2 மே.கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
சீரகம் – 1 1/2 மே.கரண்டி
கராம்பு – 1
உள்ளி – 3 பல்லு
பெருங்காயம் – சிறு துண்டு
மிளகு – 5 அல்லது 6
இஞ்சி – சிறு துண்டு
செய்முறை:
ஆட்டு எலும்பை சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். பின்பு புளியை 3/4 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு அளவான தீயில் நன்றாக அவிய விடவும்.பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைப்பதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு சுடச் சுட பரிமாறவும்.