சென்னை: மட்டன், சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. வித்தியாசமாக இடியாப்ப பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 150 கிராம்
வெங்காயம் – 4
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 4
இஞ்சி- 1
பூண்டு – 1
புதினா இலை – கைப்பிடியளவு
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தயிர் – 1 கப்
பட்டை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
பிரிஞ்சி இலை – 2
நெய் – கால் கப்
பிரியாணி மசாலா- 1 பாக்கெட்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினாவை நறுக்கி கொள்ளவும். மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து இஞ்சி- பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, மீல் மேக்கர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் தயிர் சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில்விட்டு இறக்கி இடியாப்பம், புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி 2 நிமிடம் வேகவிட்டு இறக்கினால் இடியாப்ப பிரியாணி ரெடி.