இலங்கை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகிறது.
முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது.
பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழினப் படுகொலையின் 16 ஆண்டு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆரம்பமாகியுள்ளன.