சர்வதேச விருது வாங்கிய கண்ணே கலைமானே படம்
![](https://vivegamnews.com/wp-content/uploads/2023/07/1-703.jpg)
சினிமா: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.
இப்படம் ஏற்கனவே 2023-ம் ஆண்டு பிரான்சில் நடந்த இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உதயநிதி ஸ்டாலினுக்கான சிறந்த தயாரிப்பாளர் விருதையும், தமன்னாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், உதிகாரி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளது.
தற்போது ‘கண்ணே கலைமானே’ சிறந்த படத்திற்கான 17வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி கூறுகையில், “காலம் கடந்தாலும் நல்ல படைப்புகள் பேசப்படும்.
அந்த வகையில் படம் ‘ கண்ணே கலைமானே’ திரைப்படம் தொடர்ந்து விருதுகளை பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.