பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா சீனியர் அணிகளுக்கு எதிரான ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது.

இந்திய அணி நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத் கவுர் 21-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.