பாரீஸ்: ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.784 வினாடிகளில் இலக்கை எட்டி அமெரிக்க வீரர் முதலிடம் வென்று சாதித்துள்ளார்.
சிறு வயது முதலே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க தடகள வீரர் நோவா லைல்ஸ், ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார். ஆரம்பத்தில் சற்று பின் தங்கிய அவர், கடைசி 10 மீட்டர் தொலைவை மின்னல் வேகத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.
உசைன் போல்டின் உலக சாதனையை கால் வினாடியில் தவற விட்ட நோவா லைல்ஸ், ஆஸ்துமா, வாசிப்பு குறைபாடான dyslexia, மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவற்றை கடந்து தம்மால் சாதிக்க முடிந்தது என்றால் மற்றவர்களாலும் சாதிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.