பாரிஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-வது தரவரிசையில் உள்ள இத்தாலிய கியுலியோ செப்பீரியை எதிர்த்து விளையாடினார். இதில், அல்கராஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் அல்கராஸ் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானை எதிர்கொள்வார். ஏழாம் நிலை வீராங்கனையான நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலாஸை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார், அதே நேரத்தில் 25வது நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்ரின்ஸ்கி, ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும் ஐந்தாவது நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், 42-வது நிலை வீராங்கனையான ஸ்லோவாக்கியாவின் ரெபேக்கா ஸ்ராம்கோவாவை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்சு ஓபனில் இகா ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 22வது வெற்றியைப் பெற்றார். இரண்டாவது சுற்றில் இகா ஸ்வியாடெக், கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை எதிர்கொள்கிறார். ரடுகானனு தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் சின்யுவை 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
9-வது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோ, ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனீரோவிடம் 0-6, 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 12-வது நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, அர்ஜென்டினாவின் ஜூலியா ரீராவை 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.