ஆப்கன் : தன் மகனுக்காக ஓய்வு பெறும் முடிவை ஆப்கன் வீரர் முகமது நபி திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச ODI போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை, ஆப்கன் வீரர் முகமது நபி திரும்பப் பெற்றுள்ளார். நபியின் மகன் ஹசன் ஐசாகில், கடந்த ஜூனியர் WC தொடரில் AFG அணிக்காக விளையாடினார்.
இதனால் விரைவில் அவர் அந்த அணியில் இடம் பிடிப்பார் எனத் தெரிகிறது. இதனால் தனது மகனுடன் ODI போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசையில், நபி தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.