இந்தியாவின் வேகப்பந்து வீரர் ஆகாஷ் தீப், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரது அருமையான பந்துவீச்சால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். பும்ரா இல்லாத சூழலில் வாய்ப்பு பெற்ற அவர், இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பர்மிங்க்ஹாம் மைதானத்தில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இது அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகும். இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பங்களிப்பு முக்கியமானது.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் – இவை இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. அவரது இந்த சாதனைக்கு இங்கிலாந்து ரசிகர்களே அவரை பாராட்டி ஒரு இசைபாடல் பாடியுள்ளனர்.
Let It Be பாடலின் துனையில் “Akash Deep, Akash Deep, Bowling England Out, Akash Deep” என அவர்கள் பாடி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் ஒரு சிறப்பாக குறிப்பிட வேண்டியது, முகமது சிராஜும் 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றி இந்திய அணிக்காக ஒரு முக்கியமான திருப்பமாகவும், ஆகாஷ் தீப்புக்காக புதிய வாயிலாகவும் அமைந்துள்ளது.