சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
18-ஆவது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி மாா்ச் 22-இல் கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
தொடா்ந்து சென்னையில் மாா்ச் 23-இல் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீா்ந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனா். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
போட்டி நடப்பதற்கு முன்பாக மாலை 6.30 முதல் 6.50 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.