சென்னை: இந்தியாவின் வலிமையான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது.
தொடரின் 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவை பல சோதனைகளில் எதிர்கொண்டார். இதில் அர்ஜுன் எரிகைசி வெள்ளை காய்களுடன் விளையாடினார். 44-வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 5 சுற்றுகள் முடிவில் 4 புள்ளிகளுடன் அர்ஜுன் எரிகைசி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். லெவோன் அரோனியன் 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அமீப் தபதாபேயி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.