சென்னை: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது பலரிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது.

இந்தப் பட்டியலில் அவர்களுக்கு இடம் கிடைக்காததைப் பற்றி, இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “ஃபார்மில் இருக்கும் வீரர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேர்வு குழு எந்த அடிப்படையில் முடிவெடுத்தது என்பது புரியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியமான தருணங்களில் நம்பிக்கை தரக்கூடிய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போனது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்த மாதம் தொடங்கும் ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு, அணித் தேர்வு தொடர்பான சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.