சென்னை: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இடம் பெறாதது ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

முக்கியமாக, இந்தியாவின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஃபார்மில் இருக்கும் வீரர்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேர்வுக் குழுவின் அடிப்படை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஆனால் சிலர் தவிர்க்கப்பட்டு, சிலர் சேர்க்கப்பட்ட விதம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதம் சூடுபிடித்துள்ளது.