ஹுலுன்பியர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென்கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய தரப்பில் உத்தம் சிங் (13-வது நிமிடம்), ஜர்மன்பிரீத் சிங் (32-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (19-வது மற்றும் 45-வது நிமிடம்) 2 கோல்களும் அடித்தனர். 33-வது நிமிடத்தில் தென் கொரியா சார்பில் யாங் ஜிஹூன் ஒரு கோல் அடித்தார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.