பிரிஸ்டோ: மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து பென் டக்கெட் (107) சதத்தால் 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 58 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன ஸ்டீவ் ஸ்மித் 48 பந்தில் 36 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 20 பந்தில் 28 ரன்களும் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.
இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசப்பட்டால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து 4 பந்துகள் அதிகமாக வீசியதால் விதி பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து தோல்வயிடைந்தது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.