மும்பை: இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முக்கிய பங்கு வகிக்கும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள், பிசிசிஐ மற்றும் ஐசிசி குறித்து சில விவாதக்குரிய பதில்களை அளித்துள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன, இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களிடம் பிசிசிஐ மற்றும் ஐசிசி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்ட போது, ஸ்மித் “ஐசிசி” என்று பதில் கூறியுள்ளார், அதனை தொடர்ந்த அவர் “பிசிசி அளவுக்கு அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் கிடையாது” என்று கூறினார். ஆனால் அதை தவறாக சொல்லி விட்டேன் என உணர்ந்த ஸ்மித், “நான் அப்படி சொல்லவில்லை, அது காமெடிக்காக இருந்தது” என்று கூறினார்.
பின்பு, அவர் “ICC என்றால் லீடர்கள்” என்ற பதிலையும் அளித்தார். பிசிசிஐ பற்றி அவர் “சக்தி வாய்ந்தது” என்று ஒற்றை வார்த்தையில் கூறினார். இதேபோல், டிராவிஸ் ஹெட் பிசிசிஐ ஆட்சியாளர்கள், ஐசிசி இரண்டாவது இடம் என குறிப்பிட்டார். மேலும், “இந்திய கிரிக்கெட் பலம் வாய்ந்தது” என்ற பதிலையும் வழங்கினார்.
இந்தப் பதில்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வங்கதேச மற்றும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி “ICC = BCCI” என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்வதை இப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் அத்தனை அளவுக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது. இதேபோல், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் லயன் ஆகியோர் “ICC என்றால் அவர்கள் தான் பாஸ்” என்று கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் பாட்டி கம்மின்ஸ் “ICC, BCCI, இந்திய கிரிக்கெட் அணி என மூன்றும் மிகப்பெரியது” என்ற ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.