ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 46வது போட்டியில் ஏப்ரல் 27ஆம் தேதி, டெல்லி அணியினை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. முதலில் விளையாடிய டெல்லி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகப்பட்சமாக அபிஷேக் போரேல் 28, கேஎல் ராகுல் 41, ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்து களமிறங்கினார்கள். பின்னர் பெங்களூரு அணியின் தொடக்கம் கடினமாக இருந்தது, ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0 மற்றும் கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்களில் அவுட்டாகி 26/3 என ஆரம்பத்தில் திணறியது.

இந்த நிலையில் விராட் கோலி நங்கூரமாக விளையாடி 51 (47) ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை முன்னேற்றினார். அவருடன் சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ருனால் பாண்டியா 73* (47) ரன்கள் எடுத்து வெற்றியினை உறுதி செய்தார்.
இறுதியில் டிம் டேவிட் 19* (5) ரன்கள் எடுத்து 18.3 ஓவரில் 165/4 ரன்களை அடித்து, பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன், பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெற்றது.
போட்டியின் முடிவில் விராட் கோலி கூறியதாவது, “நாங்கள் 26/3 என சரிந்த போது, இலக்கு மற்றும் சூழ்நிலைகளைப் பார்த்து விளையாடினோம். நான் மற்றும் பாண்டியா சதம் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். பாண்டியா இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டார்”.
கோலி, “சேசிங் செய்யும் போது, ஸ்கோர், சூழ்நிலைகள் மற்றும் பவுலர்களின் தாக்கத்தை கணக்கிட்டு விளையாட வேண்டும். சிங்கிள், டபிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி, அதே நேரத்தில் பௌண்டரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் சேசிங் திட்டம்” என்று கூறினார்.
அவர் மேலும், “எனது அடுத்த போட்டி என்பது எந்த பவுலர் கடினமாக இருக்கப்போகின்றார் என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை அமைப்பது” என்று குறிப்பிட்டார்.