மும்பை: மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் யாரெல்லாம் இடம்பிடித்துள்ளனர் என்று தெரியுங்களா?
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ பிரிவில் சோ்க்கப்பட்டிருக்கின்றனா்.
இந்திய அணியில் விளையாடும் வீரா், வீராங்கனைகளுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது. அந்த வகையில், 2024-25-ஆம் ஆண்டு காலக்கட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது