புதுடெல்லி: பிசிசிஐ விதித்த புதிய விதிமுறைக்கு கிரிக்கெட் வீரர் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதன் எதிரொலியாக விதியை மாற்ற உள்ளது பிசிசிஐ என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை பி சி சி ஐ மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர பி சி சி ஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகவல் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.