மும்பை: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளக்க உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்தது. இந்த விதி ஐபிஎல் தொடரிலும் பின்பற்றப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. ஐபிஎல் தொடரில் உமிழ்நீர் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுக்கு அனைத்து கேப்டன்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.