இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, தனது டெஸ்ட் வாழ்நாளில் 10,000 ரன்கள் அடைவதற்கும் வாய்ப்பு உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதனால் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, கோலி இந்த முடிவை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கோலி தேவை என்றும், அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்றும். மேலும் அவர் 60 ரன்களுக்கு மேலான சராசரியில் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த சாதனையாளர். அவரது பார்வையில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் பல தருணங்களை தரக்கூடியவர். கோலியின் ஓய்வு முடிவால் பிசிசிஐவும் சிரமத்தில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பிசிசிஐ, குறைந்தபட்சம் இங்கிலாந்துடன் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காவது அவர் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
தற்போது வரை கோலி, தனது முடிவை உறுதிப்படுத்தவோ அல்லது மாற்றவோ தயாராக இல்லை.இந்த முடிவால், இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுந்துள்ளன. கோலியின் அனுபவம் மற்றும் தோழமை அணிக்காக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அவருடைய ஓய்வு, அணியின் நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அதிக அனுபவம் கொண்ட ஒரு வீரராக, விராட் கோலியின் தொடர்ந்து விளையாடுவது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். அவரது முடிவை மாற்றும்படி அனைத்து தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. இனி விராட் கோலி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.