நார்வேயின் ஸ்டாவஞ்சரில் நடைபெறும் நார்வே கிளாசிக்கல் சதுரங்கப் போட்டி. 6 வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் சுற்றில், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷை எதிர்கொண்டார். இதில், கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்.

4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில், 55-வது நகர்த்தலில் குகேஷ் செய்த தவறு காரணமாக கார்ல்சன் வெற்றி பெற்றார். முதல் சுற்றின் முடிவில், 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நகாமுராவுடன் 3 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது முதல் சுற்றில் சக நாட்டு கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருனாவை தோற்கடித்தார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி சீன நம்பர் ஒன் வெய் யிக்கு எதிராக டிராவில் விளையாடினார். கிளாசிக்கல் போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க அர்மகெதோன் ஆட்டம் நடத்தப்படும். அர்ஜுன் எரிகைசி போட்டியில் வெற்றி பெற்று 1.5 புள்ளிகளைப் பெற்றார். வெய் யி ஒரு புள்ளியைப் பெற்றார். பெண்கள் பிரிவில், இந்தியாவின் ஹோனேரு ஹம்பி சக நாட்டு வீராங்கனை ஆர். வைஷாலியை தோற்கடித்தார்.