மதுரை: மதுரை பல்கலை. கல்லூரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக் கல்லூரி மாணவர்களுக்கு மிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் 3 வது முறையாக சுழற்கோப்பை வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் கோப்பையை கைப்பற்றினர். கோப்பை மற்றும் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுடன், கல்லூரி முதல்வர் முனைவர் ஷாசுலி இப்ராஹீம், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் வேலுச்சாமி, அலுவலகக் கண்காணிப்பாளர் சுல்தான் சையது இப்ராஹீம், உடற்கல்வி இயக்குநர் முனைவர் மூஸா முபாரக் அலி, சுயநிதிப்பிரிவு ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் சஃபி அஹமது மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.