சென்னை: டிஎன்சிஏ நகர 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் வீரர் தேர்வு, சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ‘பி’ மைதானத்தில் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 1, 2006 அன்று அல்லது அதற்குப் பிறகும், ஆகஸ்ட் 31, 2009 அன்று அல்லது அதற்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும்.

சென்னையில் வசிப்பவர்கள் மற்றும் முகவரிச் சான்று உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சென்னையைச் சேர்ந்த வீரர்கள் இன்று காலை 10 மணி முதல் டிஎன்சிஏ இணையதளத்தில் (www.tnca.in) தங்கள் பெயர்களையும் விவரங்களையும் பதிவு செய்யலாம். கடைசி தேதி 10-ம் தேதி. வீரர்களின் விவரங்கள் சரிபார்த்த பிறகு, தேர்வு தேதி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இந்தத் தகவலை டிஎன்சிஏ செயலாளர் ஆர்.ஜே. பழனி தெரிவித்தார்.