இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த வீரர்கள் அஸ்வினும் ஜடேஜாவும், குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இந்தியா சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்றதில்லை. இந்த மொத்த வெற்றியிலும் அஸ்வினும் ஜடேஜா வேகமான பந்து வீச்சில் எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் முக்கிய தருணங்களில் அபாரமாக ரன்கள் சேர்த்து அணியை காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், அஸ்வினும் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது பதிலாக யார் வரப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இந்திய அணியில் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல், குல்திப் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும், அஸ்வினை மாற்றக்கூடிய ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் யார் என்று ஆராய்ந்தபோது, பிசிசிஐ தேர்வு குழு தற்போது தனுஷ்கோட்டியான் என அறிவித்துள்ளது. 26 வயதான தனுஷ்கோட்டியான், மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 33 முதல் தர போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள தனுஷ், இந்த நேரத்தில் தனது பந்து வீச்சில் சராசரி 25. மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
தனுஷ்கோட்டியான் வெறும் பந்துவீச்சாளர் அல்ல, பேட்டிங்கிலும் திறமையுள்ளவர். அவர் முதல் தர போட்டிகளில் 1525 ரன்கள் குவித்துள்ளார், அதில் இரண்டு சதங்கள் மற்றும் 13 அரை சதங்களும் உள்ளன. அவரது பேட்டிங் சராசரி 41. தனுஷ் கோட்டியான் இந்திய அணிக்கான சிறந்த தேர்வாக கருதப்படுவதாக இருந்தாலும், தற்போதைய சூழலில் உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்கு சிரமம் இருக்கின்றது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட இருக்கும் நிலையில், இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு பெறுமானால், தனுஷ்கோட்டியான் அங்கு இடம் பெற்றுவிடுவார்.