மும்பை: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து உள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தோனியின் குடும்ப அலுவலகம், SILA என்ற முன்னணி ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. SILA நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த முதலீடு செய்துள்ளதாக தோனி அறிவித்துள்ளார்.
இருப்பினும் எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்தியா முழுவதும் 125க்கும் மேற்பட்ட நகரங்களில் 20 கோடி சதுரஅடிக்கும் அதிகமான ரியல் எஸ்டேட்டை SILA நிர்வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் டோனி முதலீடு செய்திருப்பது அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.