சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூர் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் உள்ள ஈக்வடோரியல் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்த்து விளையாடுகிறார்.
14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் டிங் லிரன் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. மூன்றாவது சுற்றில், 37வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 3 சுற்றுகள் முடிவில் குகேஷ், டிங் லிரன் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
தொடரின் 4-வது நாளான நேற்று, ஓய்வு நாளாக இருந்தது. இந்நிலையில் இன்று 4-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு இருவருக்கும் பலம் பரீட்சை நடத்தப்படும்.