ஜெனீவா: 38 வயதான செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தனது 100-வது ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு முன், ரோஜர் பெடரர் மற்றும் ஜிம்மி கான்னர்ஸ் 100+ ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளனர். இப்போது ஜோகோவிச் மூன்றாவது வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சனிக்கிழமை ஜெனீவாவில் நடந்த ஜெனீவா ஓபன் இறுதிப் போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்ஸை 5-7, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் தோற்கடித்து ஜோகோவிச் தனது 100-வது பட்டத்தை வென்றார்.

இந்தப் போட்டி சுமார் மூன்று மணி நேரம் ஐந்து நிமிடங்கள் களிமண்ணில் நடைபெற்றது. 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச், கடைசியாக கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அதன் பிறகு அவர் ஒரு பட்டத்தையும் வெல்லவில்லை. மியாமி மாஸ்டர்ஸ் மற்றும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தார். தனது 100-வது பட்டத்தை வென்றதில் பெருமைப்படுவதாக ஜோகோவிச் கூறினார்.
அதற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மூன்று முறை பிரெஞ்சு ஓபன் வென்றவர் மீண்டும் அதில் பங்கேற்க பாரிஸ் சென்றுள்ளார். திங்கட்கிழமை நடைபெறும் பிரெஞ்சு ஓபன் 2025 தொடரின் முதல் சுற்றில் அவர் ஒரு அமெரிக்க வீரருடன் விளையாடுவார்.