மும்பை: தனது மகனுடன் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
IND அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மகன் அன்வே டிராவிட் உடன் கிளப் போட்டியில் விளையாடியுள்ளார். இதில் டிராவிட் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், அன்வே அரைசதம் (58) எடுத்து பிரகாசித்தார். ராகுலின் 2 மகன்களான சமித், அன்வே கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகின்றனர். சமித் KPL போட்டியிலும், தற்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காகவும் விளையாடி வருகிறார்.