ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யூப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் சென்னையின் எப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகள் மோதுகின்றன. மெரினா மச்சான்ஸ் என்று அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணியால் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. அந்த அணி கடைசியாக டிசம்பர் 11-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு சென்னையின் எஃப்சி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் 3 போட்டிகளை டிரா செய்தனர். 19 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 18 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ஆறாவது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சியை விட (28) 10 புள்ளிகள் பின்தங்கி உள்ளன.

சென்னையின் எஃப்சி நான்கு ஆட்டங்களிலும், ஈஸ்ட் பெங்கால் எப்சி ஐந்து ஆட்டங்களிலும் உள்ளன. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும். முன்னதாக டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் நடந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை வீழ்த்தியது. ஈஸ்ட் பெங்கால் அணி இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று புள்ளிகளைப் பெற ஆர்வமாக இருக்கும்.
சென்னையின் எப்சி பதிலடி கொடுக்க ஆர்வமாக இருக்கும். இந்த சீசனில் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட அணிகளுக்கு எதிரான கடைசி ஐந்து போட்டிகளில் சென்னையின் எஃப்சி வெற்றி பெறவில்லை, இரண்டில் டிரா மற்றும் மூன்றில் தோல்வியடைந்தது. இரு அணிகளும் ஐஎஸ்எல்லில் 9 முறை நேருக்கு நேர் சந்தித்து தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.