ஐரோப்பா : ஐரோப்பா கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. என்ன தெரியுங்களா? 26 பந்துகளில் சதம் விளாசப்பட்டுள்ளது. 24 சிக்ஸர்களை விளாசிய சாதனை படைத்துள்ளார் மிலன் வீரர்.
ஐரோப்பிய கிரிக்கெட் தொடரில் (T10) புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிவிட்டாவெச்சியா அணிக்கு எதிரான போட்டியில், மிலன் வீரர் ஜையின் நக்வி, வெறும் 26 பந்துகளில் சதம் விளாசினார்.
கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். 24 சிக்ஸர், 2 ஃபோர் என 37 பந்துகளில் 160* ரன்களை அடித்தார். 8, 10-வது ஓவர்களில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசினார்.
இவர்தான் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்கள்மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.