மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ. ஆண்டுதோறும் வீரர்களின் திறமையையும், ஆட்டதிறனையும் மதிப்பீடு செய்து, மத்திய ஒப்பந்தங்களை புதுப்பித்து வருகின்றது. இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பி பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் உள்ளனர்.
சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெயிக்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதர், துருவ் ஜூரேல், சர்பிராஷ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷான், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலின் அடிப்படையில் வீரர்களுக்கு ஊதியம், பாதுகாப்பு மற்றும் அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.