புதுடில்லி: இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜஸ்ப்ரித் பும்ரா என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் பகழாரம் சூட்டியுள்ளார்.
காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஹர்மிசன் கூறுகையில், “என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு மாற்று வீரரை கண்டறிய முடியாது
அதனால், தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.