வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 280 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் சதம் அடித்தார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பீல்டிங்கை தேர்வு செய்தார். புரூக் சிறப்பாக செயல்பட்டார், இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டாக டக்கெட் ஆட்டமிழந்தார். க்ராவ்லி (17), பெத்தேல் (16) ஆட்டமிழக்க, அனுபவம் வாய்ந்த ஜோ ரூட் (3) விரைவாக வெளியேறினார்.
இங்கிலாந்து 43/4 என்று போராடியது. பின்னர் ஹாரி புரூக் மற்றும் போப் ஜோடி இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றியது. போப் அரை சதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்த நிலையில், போப் (66) ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டோக்ஸ் (2) ஏமாற்றினார். புரூக் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 123 ரன்கள் (5×6, 11×4) எடுத்து ரன் அவுட் ஆனார்.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், ரூர்கே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ‘டாப்’ சரிந்தது, நியூசிலாந்து அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்களான லதம் (17), கான்வே (11), பேட்டிங்கில் இறங்கிய ரச்சின் ரவீந்திரன் (3) ஆகியோர் நிலைக்கவில்லை. வில்லியம்சன் 37 ரன்களில் திரும்பினார். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் 86/5 என 194 ரன்கள் பின்தங்கியுள்ளது.