தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனால் 140 கோடி இந்திய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். பார்படாஸ் புயல் காரணமாக இந்திய அணி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க தாய்நாடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி நேற்று இந்தியா திரும்பியது. இவர்களுக்கான பாராட்டு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வீரரும் தங்கள் எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
உலகக் கோப்பை போட்டியின் ஆட்ட நாயகன் பும்ரா, “பொதுவாக நான் போட்டிகளில் வெற்றி பெறும்போது அழுவதில்லை. ஆனால் எனது மகனுக்கு முன்னால் உலகக் கோப்பையை வென்றது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அதனால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மூன்று முறை அழுதேன் எனக் கூறியுள்ளார்.