கவுஹாத்தி: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் செவ்வாய் அன்று கௌஹாத்தியில் தொடங்கியது.

இந்திய மகளிர் அணி தன் தொடக்க வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தானா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 37 ரன்கள் எடுத்தார், ஹர்லின் தியோல் 48 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 21 ரன்கள் எடுத்தார், ஜெமிமா கோல்டன் டக் ஆனார். நடுவரிசையில் தீப்தி சர்மா 53 ரன்கள், அமஞ்சோத் கவுர் 57 ரன்கள் மற்றும் சினே ரானா 28 ரன்கள் சேர்த்து இந்தியா 47 ஓவரில் 269 ரன்களை எட்டு விக்கெட்டிற்கு அடைந்தது.
இலங்கை அணி 47 ஓவரில் 211 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹசினி பெரேரா 14 ரன்கள், கேப்டன் சமாரி 43 ரன்கள், ஹர்ஷிதா 29 ரன்கள் எடுத்தனர். நடு வரிசையில் நிலாக்க்ஷிகா சில்வா மட்டும் 35 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றி இந்திய மகளிர் அணியின் தொடக்க போராட்டத்தை வெற்றியாக மாற்றியது, அடுத்த போட்டிகளில் அவர்களின் ஆற்றல் மற்றும் முழுமையான செயல்திறன் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.