துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிந்ததும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒரு வித்தியாசமான நடவடிக்கையை எடுத்தார். போட்டி முடிவின் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமல், கள நடுவர்களை மட்டும் சந்தித்து கைகுலுக்கச் செய்தார்.

இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் வீரர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. முதலில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் முன்பும், போட்டி முடிந்ததும் கைகுலுக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் அவர்களுடன் கைகுலுக்க வருவார்கள் என்று எண்ணி, பயத்தில் உறைந்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
முக்கியமாக, அபிஷேக் ஷர்மா (74 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (47 ரன்கள்) போட்டியில் சிறந்த தொடக்கத்தை வழங்கி, இந்திய அணியை 18.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதும் முக்கிய பங்கு வகித்தது.
கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, ஒற்றை வார்த்தையில் ‘அச்சம் இல்லாதவர்கள்’ (Fearless) என்று பதிவிட்டார். இந்தச் செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்திய அணியின் மனப்பாங்கையும், போராட்ட மனோபாவத்தையும் வெளிப்படுத்தியது.