வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டெல்லியில் பல பரீட்சைகளை நடத்த உள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் பேட்டிங் வரிசையில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
தகவலின்படி, புஜாராவுக்கு பிறகு அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கிடையே தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது திறமையை வெளிப்படுத்தி புஜாரா இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 7 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 21 சராசரி வைத்திருப்பதால், சாய் சுதர்சன் மீது மன அழுத்தம் அதிகமாக உள்ளது.

மொத்தமாக 4 டெஸ்ட் போட்டிகளில் சாய் சுதர்சன் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், இதில் ஒரு அரை சதம் அடங்கியுள்ளது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 7 ரன்கள் எடுத்த இவர், இரண்டாவது டெஸ்டில் சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதற்கு மேலாக, அணியில் உள்ள துருவ் ஜூரல் சதம் அடித்து உள்ளதால், அவர் மூன்றாவது வீரராக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சாய் சுதர்சன் தன் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம்; இல்லையெனில் தென்னாப்பிரிக்க தொடருக்கு மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.